திங்கள், 20 ஆகஸ்ட், 2012

பொன்மானை தேடி




ஆண்      :  பொன்மானை தேடி நானும் பூவோடு வந்தேன் (இசை)

ஆண்      :  பொன்மானை தேடி நானும் பூவோடு வந்தேன்
                  நான் வந்த நேரம் அந்த மான் அங்கே இல்லை
                  அந்த மான் போன மாயமென்ன என் ராசாத்தி...
                  அடி நீ சொன்ன பேச்சு நீர் மேலே போட்ட மாக்கோலமாச்சுதடி
                  அடி நான் சொன்ன பாட்டு ஆத்தோரம் வீசும் காத்தோட போச்சுதடி
                 
பெண் 
    :  மானோ தவிச்சு வாடுது மனசுல நினைச்சு வாடுது
                  எனக்கோ ஆசை இருக்குது ஆனா நிலைமை தடுக்குது
                  உன்னை மறக்க முடியுமா உயிர வெறுக்க முடியுமா
                  ராசாவே...காற்றில் ஆடும் தீபம் போல
                  துடிக்கும் மனச அறிவாயோ

ஆண்      :  பொன்மானை தேடி நானும் பூவோடு வந்தேன்
                  நான் வந்த நேரம் அந்த மான் அங்கு இல்லை (இசை)

பெண்      :  ஆரிராராரோ... ஆரி ராராரோ...
                   ஆரிராராரோ... ஆரிராராரோ... ஆராரோ...ஆராரோ


ஆண் 
    :  எனக்கும் உன்னை புரியுது உள்ளம் நல்லா தெரியுது
                  அன்பு நம்ம சேர்த்தது ஆசை நம்ம பிரிச்சது
                  ஒன்னை மறக்க முடியல உயிர வெறுக்க முடியல
                  ராசாத்தி... நீயும் நானும் ஒன்னா சேரும்
                  காலம் இனிமே வாராதோ

பெண்    :   இன்னோரு ஜென்மம் இருந்தா
                  அப்போது பொறப்போம் ஒன்னோடு ஒன்னா
                  கலந்து அன்போட இருப்போம்
                  அது கண்டாலம் போச்சுதுன்னா
                  என் ராசாவே...
                  நான் வெண்மேகமாக விடிவெள்ளியாக
                  வானத்தில் பொறந்திருப்பேன்
                  என்னை அடையாளம் கண்டு
                  நீ தேடி வந்தா அப்போது நான் சிரிப்பேன்

ஆண்      :  பொன்மானை தேடி நானும் பூவோடு வந்தேன்
                  நான் வந்த நேரம் அந்த மான் அங்கு இல்லை

உயிரிலே என்




உயிரிலே என்:

உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி
விழியிலே உன் விழியிலே விழுந்தவன் தானடி
உயிருடன் சாகிறேன் பாரடி
காணாமல் போனாய் இது காதல் சாபமா?
நீ கரையை கடந்த பின்னாலும்
நான் மூழ்கும் ஓடமா?
(உயிரிலே..)

கனவுகளில் வாழ்ந்துவிட்டேன் இறுதிவரை
கன்களிலே தூவிவிட்டாய் மண்துகளை
இந்த சோகம் இங்கு சுகமானது
அது வரமாக நீ தந்தது
நீ மறந்தாலுமே உன் காதல் மட்டும்
என் துணையாக வருகின்றது
ஆறாத காயங்கள் என் வாழ்க்கை பாடமா?
இனி தீயை வைத்து எரித்தாலும் என் நெஞ்சம் வேகுமா?
(உயிரிலே..)

கடலினிலே விழுந்தாலும் கரையிருக்கும்
காதலிலே விழுந்தபின்னே கரையில்லையே
இந்த காதல் என்ன ஒரு நடை வண்டியா?
நான் விழுந்தாலும் மீண்டும் எழ
இரு கண்ணை கட்டி ஒரு காட்டுக்குள்ளே
என்னை விட்டாயே எங்கே செல்ல?
ஆன் நெஞ்சம் எப்போதும் ஒரு ஊமை தானடி
அது தெருவின் ஓரம் நிறுத்திவைக்கும்
பழுதான தேரடி
(உயிரிலே..)